புதுடெல்லி: இலங்கை, நடுத்தரமான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கோலம்பேஜ் தெரிவித்தார்.
சென்ற திங்கட்கிழமை தொலைக்காட்சியில் பேசிய கொலம்பேஜ், "பாதுகாப்பு உத்திகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிபர் (கோத்தபய ராஜபக்சே) கூறியுள்ளார். இந்தியாவிடமிருந்து பலனடைய விரும்புகிறோம். சமமான வெளியுறவுக் கொள்கைகள் கடைப்பிடிக்கப் பட்டாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்காது," என்று உறுதியளித்தார்.
மேலும் பேசிய அவர், ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது தவறான முடிவு என்று கூறினார்.

