இந்தியாவில் ஒரே நாளில் 75,000க்கு மேற்பட்டோருக்கு தொற்று; ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 75,000க்கு மேற்பட்டோருக்கு தொற்று; ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

1 mins read
10a2caa2-8487-4520-b130-7141951fd5ae
இதே வேகத்தில் பாதிப்புகள் அதிகரித்தால், ஒருவாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடாக இந்தியா உருவெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தற்போது இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,023 பேர் உயிரிழந்தனர். அங்கு கொரோனா பரவல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுவரை மொத்தம் 32,34,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 15 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட, உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

இதே வேகத்தில் பாதிப்புகள் அதிகரித்தால், ஒருவாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடாக இந்தியா உருவெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தற்போது இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்