நீட் தேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்

புது­டெல்லி: கொரோனா விவ­கா­ரம் முடி­வுக்கு வராத நிலை­யில் மருத்­து­வப் படிப்­புக்­கான நீட் தேர்­வை­யும் பொறி­யி­யல் படிப்­புக்­கான ஜேஇஇ தேர்­வை­யும் நடத்­த வேண்டும் என நாடு முழு­வ­தி­லும் இருந்து 150 கல்­வி­யா­ளர்­கள் பிர­த­மர் மோடிக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

தேர்வை ஒத்தி வைக்க வாய்ப்பே இல்லை என தேசிய தேர்வு முகமையும் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே தேர்வு எழு­து­வ­தற்­காக ஹால்­டிக்­கெட்டை 14 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­னர்.

நாட்­டின் பல்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் கீழ் இயங்­கும் கல்­லூ­ரி­களில் பணி­யாற்­றும் 150க்கும் மேற்­பட்ட கல்­வி­யா­ளர்­கள் பிர­த­ம­ருக்­குக் கடி­தம் எழு­தி­யுள்ள நிலை­யில், தேர்­வு­களை நிறுத்தி வைக்­கக்­கோரி உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுக்க எதிர்க்­கட்­சி­கள் தயா­ராகி வரு­கின்­றன.

எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்த மாநில முதல்­வர்­க­ளு­டன் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்ட காங்­கி­ரஸ் இடைக்­கா­லத் தலைவி சோனியா காந்தி, நீட் தேர்வை ஒத்­தி­வைக்க வேண்­டு­மென மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நுழைவுத் தேர்வுகள் நடை­பெற உள்­ளன. இதில் நாடு முழு­வ­தி­லும் இருந்து 14 லட்­சம் மாணவ, மாண­வி­யர் பங்­கேற்க உள்­ள­னர்.

பாஜக அல்­லாத எதிர்க்­கட்­சி­கள் ஆட்­சி­யில் உள்ள மேற்கு வங்­கா­ளம், மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான், ஜார்க்­கண்ட், பஞ்­சாப், சட்­டீஸ்­கர், புதுவை முதல்­வர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­திய சோனியா காந்தி, மத்­திய அரசு நுழை­வுத் தேர்­வு­கள் விவ­கா­ரத்­தில் அலட்­சி­ய­மாக நடந்து கொள்­வ­தாக சாடி­னார்.

இதை­ய­டுத்து ஆலோ­ச­னைக் கூட்­டத்­தின் முடி­வில் இரு நுழை­வுத் தேர்­வு­கள் தொடர்­பான வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்­யக்­கோரி புதிய மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே நீட் தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு உடல் வெப்­ப­நிலை 99.4 டிகி­ரிக்கு மேல் இருந்­தால் அவர்­கள் உடனடியாக தனி­ய­றை­யில் தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என தேசிய தேர்வு முகமை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!