சோனியா அதிர்ச்சி: பல மாதங்கள் ரகசிய ஆலோசனை நடத்தி கடிதம் அனுப்பிய 23 மூத்த தலைவர்கள்

சோனியா அதிர்ச்சி: பல மாதங்கள் ரகசிய ஆலோசனை நடத்தி கடிதம் அனுப்பிய 23 மூத்த தலைவர்கள்

1 mins read
0b338789-0ee3-44bc-b29a-233c180337fb
காங்­கி­ரஸ் இடைக்­கா­லத் தலைவி சோனியா காந்­தி. கோப்புப்படம் -

புது­டெல்லி: கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் பல மாதங்­க­ளாக ரக­சிய ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டது காங்­கி­ரஸ் இடைக்­கா­லத் தலைவி சோனியா காந்­தியை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அண்­மை­யில் மூத்த தலை­வர்­கள் 23 பேர் அவ­ருக்கு அனுப்­பிய கடி­தம் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்­நி­லை­யில் கடி­தம் தொடர்­பாக அத்­த­லை­வர்­கள் ஐந்து மாதங்­கள் ரக­சி­ய­மாக ஆலோ­சனை நடத்­தி­யது தெரி­ய­வந்­துள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சியை தலைமை முதல் அடி­மட்­டம் வரை முழு­மை­யாக புதுப்­பிக்க வேண்­டும் என குலாம் நபி ஆசாத், கபில்­சி­பல், மணிஷ் திவாரி உள்­ளிட்ட மூத்த தலை­வர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர். இதற்கு சோனி­யா­வின் ஆத­ர­வா­ளர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் காங்­கி­ரஸ் காரி­யக் கமிட்டி கூட்­டம் அண்­மை­யில் நடை­பெற்­றது. அப்­போது, மூத்த தலை­வர்­க­ளின் கடி­தத்­தைப் படித்­தால் தனது தாயார் சோனியா மனம் வேத­னைப்­படும் என்­றும் அத­னால் கடி­தத்­தைப் படிக்க விடா­மல் தாம் தடுத்து விட்­ட­தா­க­வும் ராகுல் காந்தி கூறி­ய­தாக ஊட­கச் செய்தி ஒன்று தெரி­விக்­கிறது.

மேலும் சோனியா காந்­தி­யைச் சந்­திக்க மூத்த தலை­வர்­கள் பல­முறை முயன்­ற­போ­தும் அதற்கு அனு­மதி அளிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அதன் கார­ண­மா­கவே கடி­தம் எழு­தும் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது என்­றும் மூத்த தலை­வர்­களில் ஒரு­வர் தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து ஐந்து மாதங்­க­ளாக ரக­சிய ஆலோ­சனை நடத்தி உள்­ள­னர். கடி­தத்­தில் குறிப்­பிட வேண்­டிய விஷ­யங்­களை முடிவு செய்த பின் முழு கடி­த­மும் எழு­தப்­பட்­டுள்­ளது.