தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து உதவிய இளம்பெண்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து உதவிய இளம்பெண்

1 mins read
50ca1635-aec2-472b-ba97-60e63878caec
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிய இன்ஷா ஜான் என்ற 23 வயது பெண் கைதானார். படம்: ஊடகம் -

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்தாண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு 23 வயது பெண் (படம்) உதவி செய்தது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் 11 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிய இன்ஷா ஜான் என்ற 23 வயது பெண் கைதானார்.

பயங்கரவாதிகளுக்கும் இவருக்கும் இடையே நடந்த முக்கியமான தகவல் பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்களைப் புலனாய்வு அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் தந்தை தாரிக்கும் பயங்கரவாதிகளை அறிந்திருந்தார் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்க ஏற்பாடு செய்து, உணவு அளித்ததாகவும் அவர்களின் நடமாட்டத்துக்கு தந்தையும் மகளும் உதவி செய்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன.