இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று 77,266 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. இதுதான் ஒரே நாளில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் ஆக அதிகமானதாகும்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக கொவிட்-19 நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3.4 மில்லியனை நெருங்கி உள்ளது. தற்போது 742,023 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2.58 மில்லியன் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 61,529 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களில் நான்கில் மூன்று பங்கு நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் இது மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கிடைத்த பலன் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

