22 இந்திய மொழிகளை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் சேர்க்க வலியுறுத்து

22 இந்திய மொழிகளை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் சேர்க்க வலியுறுத்து

1 mins read
58b63d1b-cb4f-46fd-a57a-604561b2743b
ரயில் நிலைய பெயர்ப் பல­கை­களில் இந்தி அதி­க­ள­வில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஆணையத்துக்குப் புகார்­கள் வந்துள்­ள­தா­க கன்­னட வளர்ச்சி ஆணை­யத்­தின் தலை­வர் நாகப்­ஹ­ரனா தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: மெட்ரோ ரயில் நிலை­யங்­களில் வைக்­கப்­பட்­டுள்ள பெயர்ப் பல­கை­களில் இடம்­பெற்­றுள்ள இந்தி வார்த்­தை­களை நீக்­க­வேண்­டும் என கன்­னட வளர்ச்சி ஆணை­யம் வலி­யு­றுத்தி உள்­ளது.

இல்­லை­யெ­னில் பெங்­க­ளூரு ரயில் நிலைய பெயர்ப் பல­கை­களில் 22 இந்­திய மொழி­களும் இடம்­பெற வேண்­டும் என மெட்ரோ நிர்­வா­கத்­துக்கு அந்த ஆணை­யம் அறி­வு­றுத்தி உள்­ளது.

பெங்­க­ளூ­ரு­வில் உள்ள ரயில் நிலை­யங்­களில் 'நம்ம மெட்ரோ' அறி­விப்­புப் பெயர்ப் பல­கை­களில் கன்­ன­டம், ஆங்­கி­லம், இந்தி என மூன்று மொழி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

பெங்­க­ளூரு மெட்ரோ ரயில் நிர்­வா­கத்­து­டன் கன்­னட வளர்ச்சி ஆணை­யத்­தின் தலை­வர் நாகப்­ஹ­ரனா நேற்று முன்­தி­னம் ஆலோ­ச­னை நடத்தினார்.

அப்­போது, ரயில் நிலைய பெயர்ப் பல­கை­களில் இந்தி அதி­க­ள­வில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஆணையத்துக்குப் புகார்­கள் வந்துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

சில பெயர்ப் பல­கை­களில் இந்தி நீக்­கப்­பட்­டா­லும் இன்­னும் பல பல­கை­களில் இந்தி வார்த்­தை­கள் இருப்­ப­தாக அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

"பெங்­க­ளூரு ரயில் சேவையை தமி­ழ­கம், கேரளா, ஆந்­திரா உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மக்­களும் பயன்­ப­டுத்­து­வ­தால் பெயர்ப் பல­கை­களில் 22 இந்திய மொழி­களை சேர்க்க வேண்­டும்.

"இல்­லை­யெ­னில் இந்தி மொழியை நீக்­க­வேண்­டும். கன்­ன­டம், ஆங்­கில மொழி­களை மட்­டுமே பெங்­க­ளூரு மெட்ரோ ரயி­லில் பயன்­ப­டுத்த வேண்­டும்," என நாகப்­ஹ­ரனா வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதை­ய­டுத்து பெயர்ப் பல­கை­களில் உள்ள இந்தி வார்த்­தை­களை நீக்­கு­வ­தாக பெங்­க­ளூரு மெட்ரோ நிர்­வா­கம் உறுதி அளித்­த­தா­க­வும் இது தொடர்­பாக நவம்­பர் மாதம் அந்­நிர்­வா­கம் அறிக்கை அளிக்க இருப்­ப­தா­க­வும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.