இந்தியா: 87,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்று

இந்தியா: 87,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்று

2 mins read
03e692ac-0439-47f0-a500-c2ecc66427d3
சென்னையில் கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். படம்: ஏஎப்பி -

மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனை ஊழியர்கள் 570க்கு மேல் உயிரிழப்பு

இந்­தியா முழு­வ­தும் 87,000க்கும் மேற்­பட்ட மருத்­து­வர்­கள், தாதி­யர் உள்­ளிட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் அவ­திப்­ப­டு­வ­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' தெரி­வித்து உள்­ளது.

குறிப்­பாக, மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, தமிழ்­நாடு, டெல்லி, மேற்கு வங்­கா­ளம், குஜ­ராத் ஆகிய ஆறு மாநி­லங்­களில் அத்­த­கைய பணி­யா­ளர்­க­ளின் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது என்­கிறது அந்­தத் தக­வல். பாதிக்­கப்­பட்­டோ­ரில் 74 விழுக்­காட்­டி­னர் இந்த மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

மேலும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு 573 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புப் பணி­யா­ளர்­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் மரண எண்­ணிக்­கை­யில் 86 விழுக்­காடு இந்த ஆறு மாநி­லங்­களில் நிகழ்ந்­துள்­ள­தா­க­வும் அர­சாங்­கத் தக­வலை மேற்­கோள் காட்டி 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' குறிப்­பிட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்த பணி­யா­ளர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

அத்­து­டன் கிரு­மி தொற்­றிய பணி­யா­ளர்­களில் கால்­வா­சிக்­கும் (28%) மேற்­பட்­டோர் இந்த மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­கிறது அச்­செய்தி.

மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, தமிழ்­நாடு ஆகிய ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் நேற்று முன்­தி­னம் வரை நூறா­யி­ரம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு பணி­யா­ளர்­க­ளுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­போது கிருமி தொற்­றி­யோர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் 24,484, கர்­நா­ட­கா­வில் 12,260, தமிழ்­நாட்­டில் 11,169 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு மருத்­துவ சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இவர்­களில் ஏரா­ள­மான மருத்­து­வர்­கள், தாதி­யர், மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் ஆகி­யோர் அடங்­கு­வர்.

சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்த பணி­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை மகா­ராஷ்­டி­ரா­வில் 292, டெல்­லி­யில் 51, தமிழ்­நாட்­டில் 49, கர்­நா­ட­கா­வில் 46.

ஆக அதி­க­மான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் பொது சுகா­தார நிபு­ணர்­கள் தனிக்­க­வ­னம் செலுத்தி வரு­கி­றார்­கள்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் இவ்­வாறு அதி­க­மாக பாதிக்­கப்­ப­டு­வ­தும் உயி­ரி­ழப்­ப­தும் கொள்­ளை­நோய்க்கு எதி­ரான இந்­தி­யா­வின் போராட்­டத்­திற்கு ஊறு விளை­விப்­ப­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் சந்­தித்து வரும் பேரா­பத்து குறித்து கடந்த வியா­ழக்­கி­ழமை மத்­திய அமைச்­ச­ரவை செய­லா­ளர் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

எளி­தில் கிருமி தொற்­றக்­கூ­டிய பணி­யில் ஈடு­பட்டு இருப்­ப­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு பணி­யா­ளர்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு எடுத்­து­ரைத்­த­தாக அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

மாண்டோர் 1.81%; மீண்டோர் 76.47%

இந்­நி­லை­யில், இந்­தியா முழு­வ­தும் கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 3,463,973ஆக உயர்ந்­துள்­ளது.

சனிக்­கி­ழமை காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 76,472 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் 1,021 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இதன்­மூ­லம் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 62,550ஆக உயர்ந்­துள்­ளது. தின­மும் ஆயி­ரம் பேருக்கு மேல் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழப்­பது தொட­ரு­கிறது. இருப்­பி­னும் உயி­ரி­ழப்பு 1.81% என்­றும் குண­ம­டைந்­தோர் விகி­தம் 76.47% என்­றும் சுகா­தா­ரத் துறை­யின் புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

எல்லா மாநிலங்களையும் சேர்ந்த 2,648,999 பேர் கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டைந்து வீடுதிரும்­பி உள்­ள­னர். வெள்ளிக்­கிழமை மட்­டும் 65,050 பேர் நோயி­லி­ருந்து மீண்­ட­னர்.