நோயாளியைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய மருத்துவர்

புனே: கொரோனா கிரு­மித்­தொற்­றால் உடல்­ந­லம் மோசம் அடைந்து உயி­ருக்­குப் போரா­டிக் கொண்டு இ­­ருந்த 71 வயது நோயா­ளியை எப்­ப­டி­யும் காப்­பாற்­றி­விட வேண்­டும் என்ற உந்­து­த­லில், மருத்­து­வர் ஒரு­வர் ஆம்­பு­லன்ஸ் ஓட்­டு­ந­ராக மாறி அந்த வாக­னத்தை ஓட்­டிச்­சென்று நோயா­ளி­யின் உயி­ரைக் காப்­பாற்றி உள்­ளார்.

இந்த நெகிழ்ச்­சி­யான சம்­ப­வம் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் உள்ள புனே­யில் நடந்­துள்­ளது.

மருத்­து­வர்­க­ளின் துடிப்புமிக்க இந்த மனித நேயச் சேவையை பலரும் பாராட்டி வரு­கின்றனர்.

புனே பகுதியில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்­தில் கடந்த 14ஆம் தேதிமுதல் 71 வயது நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்­நி­லை­யில், திடீரென அவரது ஆக்­சி­ஜன் அளவு குறைந்து மூச்­சுத்திண­றல் ஏற்­பட்­டதை அடுத்து, பெரிய மருத்­துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

அப்­போது ரஞ்­சித் நிகம், 35, என்ற மருத்துவர் பணி­யில் இருந் தார். அவர் பணியாற்றும் சிகிச்சை மையத்­தில் இருந்த ஆம்­பு­லன்ஸ் ஓட்டுநருக்கும் திடீர் உடல்நலக் குறை­வு ஏற்­பட்டதால் அவராலும் வர முடியவில்லை. வேறு ஆம்பு லன்ஸ் வசதியும் கிட்டவில்லை.

இதை­ய­டுத்து, மருத்துவர் ரஞ்­சித் நிகம், கொரோனா நோயா­ளி­யை ஆம்­பு­லன்சில் ஏற்றி, தானே ஆம்புலன்சை ஓட்­டிச்­சென்று அவ ரது உயிரைக் காப்பாற்றி உள்ளார்.

இது­கு­றித்து டாக்­டர் ரஞ்­சித் நிகம் கூறு­கை­யில், “வழக்­க­மாக நான் ‘பவர் ஸ்டிய­ரிங்’ வாக­னங்­கள்தான் ஓட்டி உள்­ளேன். ஆம்­பு­லன்ஸ் வேன் பழைய வாக­னம் என்­ப­தால் ஓட்டுவதற்கு சற்று கடி­ன­மாக இருந்­தது,” என்­றார்.

“இந்த டாக்­டர்­கள்தான் உண்­மை­யான கொரோனா போராட்ட வீரர்­கள். டாக்­டர்­கள் ஆம்­பு­லன்சை மட்­டும் ஓட்டிச் செல்­ல­வில்லை. இரண்டு மருத்துவமனைகளில் படுக்கை இல்­லாமல் கடை­சி­யாக ஒரு தனி­யார் மருத்துவமனையில் சேர்த்து எனது தந்­தையின் உயி ரைக் காப்­பாற்­றி­விட்டனர்,” என்று அவரது மகன் கூறினார்.

மருத்துவர் ரஞ்சித் நிகம், மருத்துவர் ராஜ் புரோகித்துடன் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளியைக் காப்பாற்ற ஆம்புலன்சை ஓட்டிச் செல்கிறார். படம்: ஊடகம்

நோயா­ளி­யின் உயிரைக் காப்பதில்தான் ­மகிழ்ச்சி உள்ளது. எனவே­தான் தாம­திக்­காமல் ஆம்­பு­லன்சை ஓட்­டிச்­சென்­றேன்.

மருத்துவர் ரஞ்­சித் நிகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!