புவனேஸ்வர்: ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வீடுகள் தண் ணீரில் மூழ்கி இடிந்து விழுந்ததில் 12 பேர் உயரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் கூறுகை யில், "ஒடிசாவில் பார்கர், நுவாபாடா, ஜஜ்பூர், பலேஸ்வர், பத்ராக் ஆகிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் ஐவர் பலியாகியுள்ளனர். இதற்கு முன்னதாக மயூர்பஞ்ச், கியோஞ்சர், சுந்தர்கர் ஆகிய இடங்களில் எழுவர் பலியாகினர். கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் 415,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

