நிதிநெருக்கடியில் தவிக்கும் திருப்பதி கோவில்: 23,000 பேருக்கு சம்பளம் தர மாற்று ஏற்பாடு

நிதிநெருக்கடியில் தவிக்கும் திருப்பதி கோவில்: 23,000 பேருக்கு சம்பளம் தர மாற்று ஏற்பாடு

2 mins read
ba2deaeb-b52d-400a-a59c-138e5e4f68a6
கோப்புப்படம்: ஊடகம் -

திருப்­பதி: உல­கின் செல்­வம் கொழிக்­கும் ஆல­யங்­களில் ஒன்­றா­கக் கரு­தப்­பட்ட திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் நிர்­வா­கத்­துக்கு நிதி நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக செய்­தி­கள் வந்­துள்­ளன.

ஆண்­டு­தோ­றும் கோடிக்­கணக்­கான மக்­கள் வந்து செல்­லக்­கூ­டிய இக்­கோ­வி­லில் பக்­தர்­கள் நன்­கொ­டை­யாக அளிக்­கும் தொகை அதி­கம் என்­ப­தால் நிர்­வா­கச் செல­வு­கள் போக எஞ்­சிய தொகை வங்­கி­யில் இருப்பு வைக்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­விட்­டது. கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்­பட்­டது. 80 நாட்­க­ளுக்­குப் பின் சுவாமி தரி­ச­னம் செய்ய பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஆனா­லும், தொற்று அச்­சு­றுத்­தல் கார­ண­மாக கோவி­லுக்கு வரும் பக்­தர்­க­ளின் எண்­ணிக்கை மிகக் குறை­வா­கவே உள்­ளது. இத­னால் உண்­டி­யல் உள்­ளிட்ட கோவி­லின் இதர வரு­வாய் கடு­மை­யாக சரிந்­து­விட்­டது. திரு­மலை கோவி­லில் 23,000த்திற்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பணி­யாற்­று­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­க­ளுக்கு மாதச் சம்­ப­ளம் வழங்­கு­வது உள்­ளிட்ட இதர கோவில் நிர்­வா­கச் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

இதை­ய­டுத்து நிர்­வா­கச் செல­வு­களை சமா­ளிப்­பது தொடர்­பாக திரு­மலை திருப்­பதி ஆலய அறக்­கட்­டளை வாரிய குழுக் கூட்­டம் வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

கூட்­டத்­துக்­குப் பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆலய அறக்­கட்­டளை வாரி­யத் தலை­வர் சுப்பா ரெட்டி, "திரு­மலை கோவி­லுக்­குச் சொந்­த­மான 12,000 கோடி ரூபாய் நிதி பல்­வேறு வங்­கி­களில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் தொகை காலாண்டு, அரை­யாண்டு மற்­றும் முழு ஆண்டு முறை­யில் முத­லீடு செய்­யப்­பட்டு முதிர்ச்சி அடைந்­த­தும் வட்டி பெறப்­பட்டு வந்­தது.

"தற்­போது ஏற்­பட்­டுள்ள நிதி­நெ­ருக்­க­டி­யைச் சமா­ளிக்க இந்த முத­லீ­டு­களை மாத முறைக்கு மாற்றி ஒவ்­வொரு மாத­மும் வட்டி பெற்று அதை கோவில் நிர்­வா­கச் செல­வு­க­ளுக்கு பயன்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார்.