மருத்துவம், பொறியியல் ஆகிய பட்டக்கல்வியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளை கொரோனா தொற்று பரவும் நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் நடத்தக்கூடாது என்று நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோல்கத்தாவில் இந்த மாணவர்கள் முகக்கவசம்
அணிந்தவாறு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

