சர்ச்சைக் கருத்து: சுதர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

சர்ச்சைக் கருத்து: சுதர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

1 mins read
94f83309-9569-48f3-8fac-339b7ae042c1
சுதர்­ஷன் தொலைக்­காட்­சியின் நிர்வாக ஆசிரியர் சுரேஷ் சவாங்கே. படம்: ஊடகம் -

புது­டெல்லி: மத்­திய அர­சுப் பணி­களில் முஸ்­லிம்­கள் அதிக அள­வில் சேர்ந்­துள்­ளார்­கள் என்­பது குறித்த நிகழ்ச்­சியை ஒளி­ப­ரப்­பிய சுதர்­ஷன் தொலைக்­காட்­சிக்கு விதிக்­கப்­பட்ட தடையை நீக்க டெல்லி உயர் நீதி­மன்­றம் நேற்று மறுத்­து­விட்­டது.

சுதர்­ஷன் சேனல் அண்­மை­யில் ஒரு நிகழ்ச்சி குறித்த விளம்­பரக் காணொளி ஒன்றை ஒளி­ப­ரப்­பி­யது. அதில் மத்­திய அர­சுப் பணி­களில் அண்­மைய கால­மாக முஸ்­லிம்­கள் அதி­க­ரித்­துள்­ள­னர் உள்­ளிட்ட பல்ேவறு சர்ச்­சைக் கருத்­து­களை வெளி­யிட்­டது.

இதைத்­தொ­டர்ந்து ஜாமியா மிலியா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மாண­வர்­கள் சார்­பில் சுதர்­ஷன் சேனல் நிகழ்ச்­சிக்கு தடை விதிக்­கக்­கோரி டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டது. ஜாமியா மிலியா இஸ்­லா­மியா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அவப்­பெ­யர் ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லும் வெறுப்­பைத் தூண்­டு­ம்வ­கை­யி­லும் குறிப்­பிட்ட சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ரா­க­வும் இந்த நிகழ்ச்சி இருக்­கிறது என மனு­வில் தெரி­வித்­த­னர். இந்த மனுவை விசா­ரித்த டெல்லி உயர் நீதி­மன்­றம், சுதர்­ஷன் சேனல் அந்த நிகழ்ச்­சியை ஒளி­ப­ரப்­புச் செய்ய வெள்­ளிக்­கி­ழமை தடை விதித்து, சேன­லின் நிர்­வாக ஆசி­ரி­யர் சுரேஷ் சவாங்கே, அர­சுக்­குப் பதில் அளிக்க உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், அந்­தத் தடையை விலக்­கக் கோரி சுதர்­ஷன் சேனல் சார்­பில் நேற்று மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டது. மனுவை விசா­ரித்த டெல்லி நீதி­பதி அசோக் சாவ்லா, "தக­வல் அமைச்­சின் கடி­தத்­திற்கு தொலைக்­காட்சி சார்­பில் விளக்­கம் அளிக்­கா­த­தால் தடையை நீக்க முடி­யாது என்று மனு­வைத் தள்­ளு­படி செய்து வழக்கை செப்­டம்­பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்­தார்.