புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும் மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாகத் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காம் கட்ட ஊரடங்குத் தளர்வு
1 mins read
இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்குத் தளர்வுகள், அமல்படுத்தப்படவுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படம்: ஏஎப்பி -

