புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் அந்த ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டு ராணுவப் பயிற்சியில் சீனா, பாகிஸ்தான் ராணுவங்களும் பங்கேற்க உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக நம்பப்படுகிறது. அத்துடன் கொரோனா தொற்றுப் பரவல் அச்சமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

