வீடுகள்தோறும் ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களை வளர்க்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்து

பிர­த­மர் மோடி ‘மன் கி பாத்’ மன­தின் குரல் என்ற வானொலி நிகழ்ச்­சி­யில் ஆற்­றிய உரை­யில், “இந்­தி­யா­வின் நாட்டு வகை இனங்­க­ளான தமிழ்­நாடு மாநி­லம், விரு­து­ந­கர் மாவட்­டம், ராஜ பாளை­யம், சிப்­பிப்­பாறை வகை நாய்­களை வீடு­கள்­தோ­றும் வளர்க்க வேண்­டும். வீட்டு காவ­லுக்கு இவை சிறந்த பாது­காப்பு அளிப் பவை,’’ என புகழ்ந்து கூறி­யுள்­ளார்.

பிர­த­ம­ரின் இந்­தக் கருத்­தால் ராஜ­பா­ளை­யம் நாய் வளர்ப்­புப் பண்­ணை­யா­ளர்­கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

ராஜ­பா­ளை­யம் நாய் வளர்ப்பு பண்­ணை­யா­ளர் திவ்யா கூறு­கை­யில், “செல்­லப்­பி­ரா­ணி­கள் வளர்ப்­போ­ரின் முதல் தேர்­வாக ராஜ­பா­ளை­யம் நாய் இனங்­கள் முத­லி­டம் வகிக்­கின்­றன. கோம்பை, சிப்­பிப்­பாறை, கன்னி இன நாய்­கள் தோட்ட பாது காப்­புக்­கும் ராஜ­பா­ளை­யம் இன நாய்­கள் வீட்­டுக் காவ­லுக்­கும் சிறந்­தது. ராஜ­பா­ளை­யம் வகை நாய் ரூ.12 ஆயி­ரம் முதல் ரூ. 25 ஆயி­ரம் வரை விற்­கப்­ப­டு­கிறது,” என்­றார்.

தஞ்­சா­வூர் தலை­யாட்டி பொம்மை பற்­றி­யும் பிர­த­மர் பேசினார். “பொம்­மை­கள் செய்­யும் மைய­மாக தஞ்­சா­வூர் விளங்­கு­கிறது. விளை யாட்டு பொம்­மை­கள் என்­பது குழந்­தை­க­ளின் அறி­வுத்­தி­றனை வளர்க்­கும் வகை­யில் இருக்கவேண்­டும். இந்­தி­யா­வில் தயா­ரிக்கப்­படும் பொம்­மை­கள் உல­கம் எங்கும் ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்­டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!