சிங்கப்பூரை பின்பற்றும் இந்திய தேர்தல் ஆணையம்

சிங்கப்பூரை பின்பற்றும் இந்திய தேர்தல் ஆணையம்

1 mins read
d0aa9a00-e6d5-4a89-9cb2-2cb8f2c45e75
படம்: ஊடகம் -

பீகாரில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவைப் பின்பற்றுவது என இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா கிருமித் தொற்று விவகாரத்துக்கு மத்தியில் சிங்கப்பூரிலும் தென்கொரியாவிலும் அண்மையில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதை முன்னுதாரணமாகக் கொண்டு பீகார் தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் நேரடிப் பிரசாரத்துக்கு வேட்பாளர் உட்பட ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்பது, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்குவது, கைகழுவ கிருமி நாசினிக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

பீகாரில் நவம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தவேண்டி உள்ளது.

குறிப்புச் சொற்கள்