இந்தியப் பொருளியல் 23.9% வீழ்ச்சி கண்டது

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9% சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு சரிவை இந்தியா எதிர்கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது.

கொரோனோ நோய்ப் பரவல் முக்கிய தொழில் துறைகளை முடக்கி, மில்லியன்கணக்கான மக்களின் வேலைகளைப் பறித்த நிலையில், பொருளியல் வல்லுநர்களின் கணிப்பைக் காட்டிலும் இந்தியப் பொருளியல் மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 3.1% வளர்ச்சியையும் 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் 5.2% வளர்ச்சியையும் இந்தியப் பொருளியல் கண்டிருந்தது.

இந்நிலையில், 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு இன்று வெளியிட்டது. அதன்படி, முந்தைய நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியப் பொருளியல் 23.9% வீழ்ச்சி கண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஆக மோசமாக கட்டுமானத் துறை 50.3% சரிவைச் சந்தித்துள்ளது. வர்த்தக, ஹோட்டல் துறை (-47%), உற்பத்தி (-39.3%), தொழில் துறை (-38.1%), சுரங்கத் தொழில் (-23.3%) ஆகிய துறைகளும் பெரிதும் இறக்கம் கண்டன.

இந்நிலையில், இந்தப் புள்ளிவிவரம் இந்தியாவின் உண்மையான பொருளியல் துயரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

பொது முடக்கம் காரணம் தரவுச் சேகரிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டதால் இந்தப் புள்ளிவிவரம் மேலும் திருத்தியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவின் மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டிலும் பொருளியல் சரிவு நீடிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.

மற்ற துறைகள் அனைத்தும் சரிவை எதிர்கொண்டபோதும் முதல் காலாண்டில் வேளாண்துறை மட்டும் 3.4% வளர்ச்சி கண்டது. கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை 9.8% அதிகமாகப் பெய்ததாகவும் அதுவே வேளாண் உற்பத்தி உயரக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் இந்தியப் பொருளியல் மேலும் சரியக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!