முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுப்பு; அலைமோதிய பக்தர்கள்

மதுரை: சென்னை உட்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் மூடப்­பட்­டி­ருந்த அனைத்து வழி­பாட்­டுத் தலங்­களும் நேற்­று­காலை முதல் மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

ஐந்து மாதங்­க­ளுக்குப் பின்­னர் கோவில்­கள் திறக்­கப்­ப­டு­வ­தால் பக்­தர்­கள் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

இந்த ஆல­யங்­களில் வழி­பாடு செய்ய அதி­காலை 4 மணி முதலே மக்­கள் வரி­சைப் பிடித்து நின்­ற­னர்.

மதுரை மீனாட்சி அம்­மன் கோயில், தென்­காசி காசி விஸ்வ நாதர் கோவில், திருச்­செந்­தூர் முரு­கன் கோவில் உள்­ளிட்ட பெரிய கோயில்­களில் தரி­ச­னம் செய்ய ஏராளமான மக்கள் அலைமோதினர்.

இத­னால், ஒரு­பு­றம் மக்­கள் மகிழ்ச்சி அடைந்­தா­லும், மற்­றொரு புறம் திர­ளான கூட்­டத்­தைக் கண்டு போலி­சார் அதிர்ச்சி அடைந்ததாக­வும் தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.

ஒரு­சில இடங்­களில் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் போலி­சார் திண­றினர்.

குறிப்­பாக, நேற்று முதல் நாளி லேயே மதுரை மீனாட்சி அம்­மன் கோவிலில் மக்­கள் கூட்­டம் அலை மோதி­ய­தாக தக­வல்­கள் கூறின.

பழனி முரு­கன் கோவி­லுக்கும் பக்­தர்­கள் வருகை அதி­க­ரித்­துள்­ளது. தரி­ச­னத்­திற்கு முன்­பதிவு செய்து வர­வேண்­டும் என கூறி யிருந்த நிலை­யில், முன்­பதி­வு ­குறை­வாக இருந்­த­தால் உள்­ளூர் பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

அதே­போல மதுரை மீனாட்சி யம்­மன் கோவி­லி­லும் நேற்று அதி காலை 4 மணி முதலே கூட்­டம் குவி­யத் தொடங்­கி­ய­தால் பாது காப்­புப் பணி­களில் ஈடு­பட்ட போலி சார் மக்­களை சமூக இடைவெளி­யுடன் நிற்­கச் செய்து கோவி­லுக்­குள் அனு­ம­தித்­த­னர்.

மேலும் பாது­காப்புக் கார­ணங் களுக்­காக லட்டு பிர­சா­தம் அளிக்­க­வில்லை என்­ப­து­டன் 10 வய­திற்கு குறை­வா­னோர், 60 வய­திற்கு மேலானோர், கர்ப்­பிணிப் பெண்­கள் கோயி­லுக்­குள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் முதற்­கட்­ட­மாக நாள் ஒன்­றுக்கு 2,000 பக்­தர்­களுக்கு மட்­டுமே தரி­ச­னத்­திற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கோயில் செயல் அலு­வ­லர் அம்­ரித் தெரிவித்­துள்­ளார்.

6 அடி தனி மனித இடை­வெளியுடன், முகக்­க­வ­சம் அணிந்து பக்­தர்­கள் தரி­ச­னம் செய்வதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அதே­போல பல கோவில்­களில் முகக்கவ­சம் அணி­யா­மல் வந்­த­வர்கள், துண்டை முகத்­தில் சுற்­றிக் கொண்டு வந்­த­வர்­க­ளுக்­கும் அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் அவர்கள் ஏமாற்­றத்துடன் திரும்­பிச்சென்­ற­னர்.

கிறிஸ்­துவ தேவா­ல­யம், பள்ளி வாசல்­கள், தர்­காக்­கள், சீக்­கிய குருத்­வாரா, புத்­த­வி­கார், ஜெயின் கோவில்­கள் உள்ளிட்ட வழி­பாட்டுத் தலங்­களில் பின்­பற்­றப்­பட வேண்­டிய வழி­காட்டி நெறிமுறை­கள் குறித்­தும் தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் க.சண்­மு­கம் பல உத்­த­ரவுகளையும் பிறப்­பித்துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!