கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள குகைப்பாதை விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக இமாச்சலப் பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தையும் லடாக் எல்லைப் பகுதியையும் இணைக்கும் இந்தப் புதிய பாதைக்கு அடல் குகை பாதை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு குகை தோண்டும் பணி தொடங்கியது. ஐந்தாண்டுகளில் இப்பணியை முடிக்கத் திட்டமிட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.
கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் மலைகளைக் குடைந்து குகைப்பாதை அமைக்கும் பணியில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினர். நாள்தோறும் சுமார் மூவாயிரம் வாகனங்கள் இப்பாதையைக் கடந்து செல்லும் அளவுக்கு பலமாக கட்டப்பட்டுள்ளது. 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு இதுவரை 3,200 கோடி செலவாகி உள்ளது.

