புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. narendramodi_in என்ற அவரது டுவிட்டர் கணக்கை இணைய ஊடுருவிகள் முடக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடை அளிக்குமாறு பல டுவீட்டுகள் அந்த டுவிட்டர் கணக்கிலிருந்து போடப்பட்டுள்ளன. திரு மோடியின் தனிப்பட்ட இணையப்பக்கத்திலிருந்து அந்த டுவிட்டர் கணக்கு வழியாக தகவல்கள் பகிரப்படும். அந்தக் கணக்கை 2.5 மில்லியன் பேர் பின்தொடர்வதுடன், திரு மோடியின் கைபேசியில் டுவிட்டர் செயலியுடனும் அது இணைக்கப்பட்டுள்ளது. திரு மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு இதனால் பாதிக்கப்படவில்லை. அதனை 61 மில்லியன் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
1 mins read
-

