அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழிவிட்ட ஆந்திர முதல்வர்

அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழிவிட்ட ஆந்திர முதல்வர்

1 mins read
c69d8e10-28b1-49c7-a3b2-9872333153f7
படம்: இந்திய ஊடகம் -

ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி கன்­னா­வ­ரம் விமான நிலை­யத்­தி­லி­ருந்து தடப்­பள்­ளி­யில் உள்ள தம் வீட்­டுக்கு காரில் சென்று கொண்­டி­ருந்­தார். அவ­ரது பாது­கா­வ­லர்­களும் வேறு சில கார்­களில் அவ­ரு­டன் சென்­ற­னர்.

இந்­நி­லை­யில், காய­ம­டைந்த நப­ரு­டன் விஜ­ய­வா­டாவை நோக்கி அவ­சர சிகிச்சை வாக­னம் ஒன்று சென்­றது. அத­னை­ய­றிந்து, அந்த அவ­சர சிகிச்சை வாக­னத்­துக்கு வழி­வி­டு­மாறு முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.

அதி­கா­ரி­களும் அந்த அவ­சர சிகிச்சை வாக­னத்­துக்கு வழி­விட்டு, பின்­னர் முதல்­வ­ரு­ட­னான பய­ணத்­தைத் தொட­ர்ந்­த­னர்.

மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்த ஆந்திர முதல்வரின் ­இந்­தச் செய­லுக்கு பல­த­ரப்­பு­க­ளி­லும் இருந்து பாராட்­டு­கள் குவிந்த வண்­ணம் உள்­ளன.

குறிப்புச் சொற்கள்