மோடிக்கு கொலை மிரட்டல்; மின் அஞ்சல் குறித்து அதிகாரிகள் விசாரணை

மோடிக்கு கொலை மிரட்டல்; மின் அஞ்சல் குறித்து அதிகாரிகள் விசாரணை

1 mins read
90a475d7-e322-4f18-ba90-6fd6ecd495e5
படம்: ஊடகம் -

பிரதமர் மோடிக்கு மின் அஞ்சல் மூலமாக வந்த கொலை மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த மின் அஞ்சல் வெளிநாட்டிலிருந்து வந்தது என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இம்மாதம் 8ஆம் தேதி போலி மின் அஞ்சல் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் 'என்ஐஏ' எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து 'ரா', உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரு கிறது.

இதற்கிைடயே பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்பிஜி பாதுகாப்புப் படைக்கு உள்துறை அமைச்சு உத்தரவிட்டு உள்ளது. அண்மையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஊடுருவல்காரர்கள் திடீரென்று முடக்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை 2.5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

முடக்கப்பட்ட பிரதமரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் மீட்டு ஊடுருவல்காரர்களின் பதிவு களை அகற்றியது.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்பும் இதே போன்று பல்வேறு காலகட்டங்களில் அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. தற்போது வந்துள்ளது போலியானது என்றாலும் பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.