இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

1 mins read
5607ae0c-ec30-4f7d-823b-d5fa1150c882
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விநியோகிக்கக்கூடாது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். படம்: ஊடகம் -

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விநியோகிக்கக்கூடாது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷ்ய தற்காப்பு அமைச்சர் ஷொயிகு, பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகம் செய்யாது என்று உறுதியளித்தார்.

மேலும், இந்தச் சந்திப்பில் 'ஏகே47' ரக துப்பாக்கிகளின் அதிநவீன வடிவமான 'ஏகே 47-203' ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தையை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்துள்ளன.

இந்தச் சந்திப்பு பற்றி திரு ராஜ்நாத் சிங் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், "ரஷ்ய தற்காப்பு அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருந்தது," என்று கூறினார்.