நள்ளிரவில் தீ; கோயிலின் பழங்கால தேர் முற்றிலும் சேதம்

நள்ளிரவில் தீ; கோயிலின் பழங்கால தேர் முற்றிலும் சேதம்

1 mins read
7492196b-0947-46a7-8a91-21fbfa94ca29
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலின் தேர் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் திடீரென தீப்பற்றியதில் தேர் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது. படம்: இந்திய ஊடகம் -

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலின் தேர் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் திடீரென தீப்பற்றியதில் தேர் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது.

நேற்று நள்ளிரவு வேளையில் தீப்பற்றியதை அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோவிலுக்குச் சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்