தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஷப் பாம்புக்குட்டியைக் கடித்துக் குதறிய ஒரு வயது குழந்தை

1 mins read
80de6345-db87-4088-9cde-3fdd0e24de8c
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி மாவட்டத்தின் போலாபூர் கிராமத்தில், விஷப் பாம்புக் குட்டியைக் கடித்த ஒரு வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாயில் ஏதோ தொங்குவதையும் குழந்தை அதை விழுங்க முடியாமல் தவிப்பதையும் பார்த்த தாயார் சோம்வதி, குழந்தையின் வாயிலிருந்து அந்தப் பொருளை எடுத்தார்; பார்த்ததும் அதிர்ச்சியில் அலறிவிட்டார்.

ஏனென்றால் அது ஒரு பாம்புக்குட்டி. வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தை பாம்புக் குட்டியை எடுத்து வாயில் போட்டு இரண்டாகக் கடித்ததுடன் விழுங்க முயற்சி செய்தது.

வாயிலிருந்து வெளியே எடுத்த சற்று நேரத்தில் அந்தப் பாம்புக்குட்டி இறந்து விட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையையும் பாம்பையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.

சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது என மருத்துவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
பாம்புகுழந்தை