மருத்துவமனையில் திருமண நாள் கொண்டாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

1 mins read
f71e0525-c7c0-46dc-8ff3-db26c8597872
-

சென்னை: மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிர­பல பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணி­யம் தனது திரு­மண நாளைக் கொண்­டாடி உள்­ளார்.

இத்­த­க­வல் அவ­ரது ரசி­கர்­களை உற்­சா­க­ம­டை­யச் செய்­துள்­ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டார் எஸ்.பி.பாலா. அப்­போது முதல் அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. இடை­யில் சில நாட்­கள் அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது. ரசி­கர்­கள் அவ­ருக்­காக தீவி­ரப் பிரார்த்­த­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் கவ­லைக்­கி­ட­மாக இருந்த அவ­ரது உடல்­நி­லை­யில் இப்­போது முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே தமது 51ஆவது திரு­மண நாளை அவர் மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்­த­ப­டியே மனைவி சாவித்­தி­ரி­யு­டன் கேக் வெட்டி கொண்­டாடி உள்­ளார்.இத்தகவலை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்