தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆம்புலன்சில் சீரழிக்கப்பட்ட கொவிட்-19 பெண் நோயாளி

1 mins read
3f256917-0347-4240-a7a5-74618f4d5e72
பொதுப்படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதன் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இது கேரள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு தரப்பினரும் அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவரை பந்தளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை ஏற்றிச்செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நவ்பல் என்பவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து அவரை ஏற்றிச் சென்றார்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் திடீரென அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் நவ்பல்.

இதன் பின்னர் அப்பெண்ணிடம் தம்மை மன்னித்து விடுமாறு அவர் கேட்டுக்கொள்ள இதை அவருக்குத் தெரியாமலேயே தன் கைபேசியில் பதிவு செய்துள்ளார் அந்த இளம்பெண்.

இதுகுறித்து அவர் போலிசில் புகார் கொடுத்ததை அடுத்து கேரளாவில் இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்த சம்பவத்துக்கு சுகாதாரத் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. மேலும் சுகாதார அமைச்சர் சைலஜா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.