புதுடெல்லி: 'வந்தே பாரத்' திட்டம் மூலம் இதுவரை 1.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இத்தகவலை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் 'வந்தே பாரத்' திட்டம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதற்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் இத்திட்டத்துக்காக விமானங்களை இயக்குகிறது.

