உலக சுகாதார நிறுவன தடுப்பூசி திட்டம்: இந்தியா இணைகிறது

உலக சுகாதார நிறுவன தடுப்பூசி திட்டம்: இந்தியா இணைகிறது

1 mins read
9146c39d-4ff6-420b-847c-0f4b86741502
ரயில் நிலையத்துக்குள் நுழைய வரிசையில் காத்திருக்கும் காசியாபாத்வாசிகள். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: கோவாக்ஸ் தடுப்­பூசி திட்­டத்­தில் இணை­வது தொடர்­பாக இந்­தி­யா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தாக உலக சுகா­தார நிறுவனம் தெரி­வித்­துள்­ளது.

இத்­திட்­டத்­தில்­ இ­ணைய இந்­தி­யா­வுக்­குத் தகுதி உள்­ளது என அந்த நிறுவனத்தின் மூத்த ஆலோ­ச­கர் ப்ரூஸ் அல்­வார்ட் தெரி­வித்­துள்­ளார்.

ஜெனி­வா­வில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்­தியா இத்­திட்­டத்­தில் இணை­வதை வர­வேற்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

மற்ற உலக நாடு­க­ளைப் போலவே தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இந்­தி­யா­வும் இணைய முடி­யும். தடுப்­பூசி தொடர்­பாக இந்­தி­யா­வுக்­குப் பர­வ­லான அனு­ப­வம் உள்­ளது என்­றார் ப்ரூஸ்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான தடுப்­பூ­சியை வாங்­கு­வ­தி­லும் விநி­யோ­கிப்­ப­தி­லும் உலக நாடு­க­ளுக்கு உத­வும் நோக்­கத்­தில் உலக சுகா­தார அமைப்­பும் பில்­கேட்ஸ் நிறு­விய ஜிஏ­விஐ தடுப்­பூசி கூட்­ட­மைப்­பும் இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன. கடந்த திங்­கட்­கி­ழமை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யில் பிரே­சிலை முந்­தி­யது இந்­தியா.

இந்­நி­லை­யில் தடுப்­பூ­சித் திட்­டத்­தில் உலக சுகா­தார அமைப்­பு­டன் கைகோர்க்க இந்­தியா முடிவு செய்­துள்­ள­தா­க ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்