இந்திய பொருளாதாரம் 11.8% சுருங்கும்: புது மதிப்பீட்டில் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதி­யாண்­டில் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் 11.8 விழுக்­காடு அள­வுக்கு சுருங்­கும் என அண்­மைய ஆய்வில் தெரிய வந்­துள்­ளது.

அனைத்­து­லக மதிப்­பீட்டு ஆய்வு முக­மை­களில் ஒன்­றான ஃபிட்ச் நிறு­வ­னத்­தின் இந்­தி­யப் பிரிவு இந்த ஆய்வை மேற்­கொண்­டுள்­ளது.

தற்­போ­தைய அறி­கு­றி­களை வைத்­துப் பார்க்­கும்­போது இந்­தி­யா­வின் பொரு­ளா­தார மீட்சி நட­வ­டிக்­கை­யா­னது வலு­வி­ழந்து காணப்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார் ஃபிட்ச் தலை­மைப் பொரு­ளா­தார வல்­லு­ந­ரான சுனில்­கு­மார்.

நடப்பு காலாண்­டில் இந்­தி­யாவின் பொரு­ளா­தா­ரம் 11.8 விழுக்­காடு அள­வுக்கு சுருங்­கும் என்­றும் அடுத்­த­டுத்து வரும் மேலும் இரு காலாண்­டு­களில் 6.7 விழுக்­காடு மற்­றும் 5.4 விழுக்­காடு என்­ற­ள­வில் பொரு­ளா­தா­ரம் சுருங்­கும் என்­றும் சுனில்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு முந்­தைய ஆய்­வின்­போது இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் நடப்பு நிதி­யாண்­டில் 5.3 விழுக்­காடு அள­வுக்­குச் சுருங்­கும் என ஃபிட்ச் கணித்­தி­ருந்­தது.

கடந்த நிதி­யாண்­டில் இந்­தி­யப் பொருளா­தா­ரம் 4.2 விழுக்­காடு வளர்ச்சி கண்­டி­ருந்­தது.

நடப்பு நிதி­யாண்­டின் ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில் பொரு­ளா­தா­ரம் 2.3 விழுக்­காடு அள­வுக்கு சுருங்­கி­யது இந்­தி­யா­வுக்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நிபு­ணர்­கள் கணித்­ததைவிட இது மிக அதிக பாதிப்­பா­கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!