ஊறுகாய்க்காக நண்பர்களுக்கிடையே சண்டை; ஒருவர் பலி

ஊறுகாய்க்காக நண்பர்களுக்கிடையே சண்டை; ஒருவர் பலி

1 mins read
93b59037-eec4-4c21-b673-2eb65d1e1725
நண்பர்கள் பிரஜங்கி குமார், சித்து குமார். படங்கள்: இந்திய ஊடகம் -

கோவையில் ஒரே அறையில் தங்கி வேலை செய்துவந்த நான்கு பதின்ம வயது இளையர்களிடையே, ஊறுகாய்க்காக சண்டை ஏற்பட்டதால், சித்துகுமார் என்ற இளையர் உயிரிழந்தார்.

பிரஜங்கி குமார் என்ற இளையரிடம் விசாரணை நடக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு பகுதியில் சித்து குமார் என்ற 17 வயது சிறுவனுடன் பிரஜங்கி குமார் உள்ளிட்ட நான்கு நண்பர்கள் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

தனியார் நிறுவனத்தில் இவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். உணவு சாப்பிட தனது அறைக்கு வந்த சித்துகுமார், சோற்றுக்கு குழம்பு இல்லாததால் பிரஜங்கி குமாரிடம் ஊறுகாய் கேட்டுள்ளார்.

ஆனால், கொடுக்க மறுத்த பிரஜங்கிடம் சித்து சண்டை போட ஆரம்பித்துள்ளார். உச்சகட்டத்துக்கு போன இந்த சண்டை சித்து குமாரின் உயிரைப் பறித்துவிட்டது.