மக்களிடம் அலட்சியப் போக்கு: மத்திய அரசு அதிருப்தி

மக்களிடம் அலட்சியப் போக்கு: மத்திய அரசு அதிருப்தி

2 mins read
f9c3b6e9-8efd-4733-9666-9ac3a5322230
குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள சர் சாயாஜி ராவ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. அப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் உடனடியாக வெளியே கொண்டு செல்லப்பட்டனர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையை செய்து கொள்­வ­தற்கு மக்­க­ளி­டையே தயக்­க­மும் பய­மும் நில­வு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் தடுப்­புக்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மக்­கள் கடைப்­பி­டிப்­ப­தில்லை என சுகா­தார அமைச்­சின் கொரோனா தடுப்பு நட­வ­டிக்கை குழு தலை­வர் வி.கே.பால் தெரி­வித்­துள்­ளார்.

"அப்­ப­ரி­சோ­த­னையை செய்­து­கொள்­வ­தற்கு யாரும் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை. கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­குறி உள்­ள­வர்­கள் பரி­சோ­த­னைக்­குத் தாமாக முன்­வர வேண்­டும்.

"ஏனெ­னில் பரி­சோ­த­னை­கள் அதி­க­ரித்­தால் மட்­டுமே கொரோனா கிரு­மித்தொற்றை முற்­றி­லும் ஒழிக்­க­மு­டி­யும்," என்று வி.கே.பால் கூறி­யுள்­ளார்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைப் அனை­வ­ரும் பின்­பற்­ற­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இது தொடர்­பில் மக்­க­ளி­டம் அலட்­சி­யப் போக்கு இருப்­ப­தாக பெரும்­பா­லான மாநி­லங்­களில் இருந்து தொடர்ந்து புகார்­கள் வரு­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதற்கிடையே இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் 3,102 பேருக்குதான் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

மேலும் ஒரு மில்லியன் பேரில் 53 பேர் மட்டுமே உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1.15 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 74 ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கியுள்ள கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.3 மில்லியனைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் சுமார் 90 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.