கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு: இந்தியாவுக்கு ரஷ்யா கோரிக்கை

கொரோ­னா­வுக்கு எதி­ரான ‘ஸ்புட்­னிக் 5’ தடுப்­பூ­சியை இந்­தியா தயா­ரிக்க முன்­வ­ர­வேண்­டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது­கு­றித்­துப் பரி­சீ­லித்து வரு­வ­தாக தேசிய தடுப்­பூசி நிபு­ணர் குழு­வின் தலை­வர் வி.கே. பால் தெரி­வித்­துள்­ளார்.

ரஷ்யா தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சி­யின் மூன்­றாம்­கட்ட பரி­சோ­தனை மற்­றும் உற்­பத்­தியை இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து மேற்­கொள்ள ரஷ்யா விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

இது­தொ­டர்­பாக ரஷ்­யா­வு­டன் நடந்­து­வ­ரும் பேச்­சு­வார்த்­தை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட வி.கே.பால், ரஷ்ய அர­சு­டன் இணைந்து செயல்­பட சில இந்­திய நிறு­வ­னங்­கள் முன்­வந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

விரை­வில் நல்ல முடிவு எட்­டப்­பட வாய்ப்­புள்­ள­தா­க­வும் வி.கே. பால் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே ஆக்ஸ்­ஃபோர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முயற்­சி­யில் தயா­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­யால் மோச­மான பக்­க­வி­ளைவு ஏற்­ப­டு­வ­தாக ஒரு தக­வல் வெளி­வந்­துள்­ளது. அந்­தத் தடுப்­பூசி பரி­சோ­த­னை­யில் பங்­கேற்ற ஒரு­வ­ருக்கு மிக மோச­மான பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டதை அடுத்து பரி­சோ­தனை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆக்ஸ்­ஃபோர்டு தடுப்­பூசி பரி­சோ­த­னைக்கு இந்­தியா உள்­ளிட்ட வேறு சில நாடு­க­ளி­லும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில் மோச­மான பக்­க­வி­ளைவு குறித்து தக­வல் வெளி­யா­னதை அடுத்து இந்­தப் பரி­சோ­த­னை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!