போதைப்பொருள்: நடிகைகள் வாக்குமூலம்; முக்கிய பிரமுகர்களுக்கு சிக்கல்

போதைப்பொருள்: நடிகைகள் வாக்குமூலம்; முக்கிய பிரமுகர்களுக்கு சிக்கல்

2 mins read
d0b8d27b-a228-4ee9-84bf-036a891757b5
நடிகைகள் ரியா, சஞ்சனா கல்ராணி, ராகினி. படங்கள்: ஊடகம் -

போதைப் பொருள் விவ­கா­ரத்­தில் கைதான நடி­கை­கள் சஞ்­சனா, ராகினி இரு­வ­ரும் பெங்­க­ளூரு போலி­சா­ரி­டம் பர­ப­ரப்பு வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.

போதைப்­பொ­ருள் விவ­கா­ரத்­தில் 24 முக்­கி­யப் பிர­மு­கர்­க­ளுக்­குத் தொடர்­புள்­ளது என இரு­வ­ரும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

மும்­பை­யைப் போன்று கன்­ன­டத் திரை­யு­ல­கி­லும் பல­ருக்­குப் போதைப்­பொ­ருள் பழக்­கம் இருப்­ப­தா­க­வும் சிலர் போதைப்­பொ­ருள் விநி­யோ­கத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் இயக்­கு­நர் இந்­தி­ர­ஜித் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதற்­குப் பல­ரும் கண்­ட­னம் தெரி­வித்த நிலை­யில், கர்­நா­டக காவல்­துறை தீவிர விசா­ரணை மேற்­கொண்­டது. அதன் முடி­வில் நடிகை ராகினி திவே­தி­யைக் கைது செய்­த­னர்.

இதை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­களை அடுத்து ராகி­னி­யின் நண்­பர்­கள் ஆறு பேர் கைதா­கி­னர்.

அண்­மை­யில் நடிகை சஞ்­சனா கல்­ரா­ணி­யும் போலி­சால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டார்.

இத­னால் கன்­ன­டத் திரை­யு­ல­கில் அடுத்து கைதா­கப் போவது யார் எனும் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

இந்­நி­லை­யில் ராகினி, சஞ்­சனா ஆகிய இரு­வ­ரி­ட­மும் மத்­திய குற்­றப்­பி­ரிவு போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது இரவு விருந்­து­களில் போதைப்­பொ­ருள் புழக்­கம் குறித்து அவர்­க­ளி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

யார் யார் போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்?, அவற்றை விநி­யோ­கிப்­பது யார்?, எத்­தனை நடி­கர், நடி­கை­கள் இந்த விவ­கா­ரத்­து­டன் தொடர்பு கொண்­ட­வர்­கள்? என்­பன உள்­ளிட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு இரு­வ­ரும் விரி­வாக பதி­ல­ளித்­தி­ருப்­ப­தாக கன்­னட ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே இந்தி நடி­கர் சுஷாந்த் சிங்­குக்­குப் போதைப்­பொ­ருள் வாங்­கிக் கொடுத்­தது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் கைதா­கி­யுள்ள இந்தி நடிகை ரியா சக்­ர­போர்த்தி, தமக்­குப் பிணை வழங்­கக்­கோரி நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

போலிஸ் விசா­ர­ணைக்­குப் பிறகு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள அவர் தமது உயி­ருக்கு சிறை­யில் அச்­சு­றுத்­தல் நில­வு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.