திரைத்துறையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று ஆசைவார்த்தை கூறித் தம்மிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக நான்கு பேர் மீது தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளார்
பெங்களூருவைச் சேர்ந்த நாராயண் என்ற அந்த ஆடவர் தனியர் நிறுவனத்தில் பணியாறுகிறார்.
இந்நிலையில் கடந்தாண்டு மாருதி, புட்டசாமி, ராஜேஷ், கேசவ் ஆகிய நான்கு பேருடன் அவருக்கு அறிமுகமானது. அப்போது இவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் இருப்பது மாருதிக்கும் கேசவுக்கும் தெரியவந்தது.
சினிமாவில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பதிக்கலாம் என நாராயண் மனதில் ஆசையை விதைத்துள்ளார் மாருதி. மற்ற மூவரும் இதை அமோதிக்க, சம்பாதிக்கும் ஆசையால் தூண்டப்பட்ட நாராயண் அவர்களை நம்பி ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
தங்களுக்குத் தெரிந்த தயாரிப்பாளர்கள் மூலம் அத்தொகையை முதலீடு செய்வதாகக் கூறிய மாருதி உள்ளிட்ட நால்வரும் அவ்வாறு செய்யவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நாராயண், தாம் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், நால்வரும் பணம் தர மறுத்ததோடு அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்ததாகாக் கூறப்படுகிறது. நால்வரும் தேடப்படுகிறார்கள்.

