மும்பை: மகாராஷ்டிர அரசு தம்மைப் பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டி உள்ளார் நடிகை கங்கனா ரணவத்.
முதல்வர் உத்தவ் தாக்கரேவின் ஆணவம் நொறுங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முதல்வர் தாக்கரே அவர்களே, திரைப்பட மாஃபியாக்களுடன் இணைந்து என் வீட்டை இடித்ததன் மூலம் என்னைப் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. நாளை உங்கள் ஆணவம் நொறுங்கும்," என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

