'ஏழைகளின் சூப்பர் மார்க்கெட்' என்று வர்ணிக்கப்படும் நூறாண்டு பழமை வாய்ந்த பல்லாவரம் சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று செயல்பட்டது. மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டுவிட்டதால் வெள்ளிக்கிழமை தோறும் இயங் கும் பல்லாவரம் சந்தையும் திறக்கப்பட்டது. கருவாடு முதல் கணினி வரை விற்கப்படும் இச்சந்தை, கொரானா கிருமிப் பரவல் காரணமாக மார்ச் 24ஆம் தேதி மூடப்பட்டது. அதனால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சந்தை திறப்பால் அவர்களின் முகத்தில் பூத்த புன்னகை முகக்கவசத்தையும் தாண்டி வெளிப்பட்டது. படம்: ஏஎஃப்பி
ஐந்து மாதங்களுக்குப் பிறகு மலர்ந்த ஏழைகள் முகம்
1 mins read
-

