புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சீன எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் சீனப் படைகள் எந்தவித ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எல்லைப்பிரச்சினை தொடர் பாக இரு நாடுகளின் பிரி கேட் கமாண்டர் அளவிலான சந்திப்பு தற்போது நடை பெற்று வருகிறது. அண்மை யில் லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி யில் சீனத் துருப்புகள் அத்து மீறி நடந்துகொண்டதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. இதனை தணிக்க இரு நாடுகள் தற்போது இணக்கம் கண்டுள்ளன.

