கர்நாடகா கோயிலில் மூன்று காவலர்கள் படுகொலை

கர்நாடகா கோயிலில் மூன்று காவலர்கள் படுகொலை

1 mins read
c2693d66-aeb1-4df6-906a-bbfaf10b0c12
அரகேஸ்வர கோயிலில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காசுகள் சிதறி கிடக்கும் காட்சி. பணத்தை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். படம்: இந்திய ஊடகம் -

மன்டியா: கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகே உள்ள மாண்டியா நகரில் கோயில் காவலர்கள் மூவரின் தலை மீது கல்லைப் போட்டு கொன்றுவிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாண்டியாவின் புறநகர்ப் பகுதி யான கட்டாலுவில் புகழ்பெற்ற ஸ்ரீ அரகேஸ்வரா கோயில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகிய மூவரும் வழக்கம்போல கோயில் காவல் பணியில் இருந்தனர்.

நேற்றுக் காலை கோயிலைத் திறப்பதற்காக வந்த பூசாரிகள் கோயில் கதவுகள் திறந்து இருப் பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கோயிலுக்குள் அவர்கள் சென்று பார்த்தபோது காவலர்கள் மூவரும் தலை நசுங்கி கொல்லப்பட்டு கிடந்தனர். கோவிலில் இருந்த ஐந்து உண்டியல்களும் திறக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது,

சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மூன்று காவலர் களும் தூங்கும்போதே கொல்லப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படு கிறது. அவர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்ததற்கான அடையாளம் தெரியவில்லை. கோயில் உண்டியல்களை கொள்ளையடிப்பது கொலைகாரர்களின் நோக்கமாக இருக்கலாம் என்று போலிசார் தெரிவித்தனர்.