இந்தியாவில் கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியது

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் கிருமித் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்து உள்ளது.

சுகாதார அமைச்சின் தகவலின்படி நேற்று வரை மொத்தம் 45,62,415 பேர் (4.5 மி) கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது.

கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,71,784ல் இருந்து 35,42,664ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 70,880 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,43,480 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். உயிரிழப்பு 1.67 விழுக்காடாகவும் குணமடைந்தோர் விகிதம் 77.65 விழுக்காடாகவும் உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.40 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 5,40,97,975 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 11,63,542 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்தது.