மகாரஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த கேலிச்சித்திரத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததால் முன்னாள் கப்பற்படை அதிகாரி ஒருவரை சிவசேனா கட்சியினர் அடித்து, உதைத்த சம்பவம் மும்பையில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
முதலில் மிரட்டல்கள் வந்ததாகவும் பின்னர் எட்டு, பத்துப் பேர் கொண்ட கும்பல் தம்மைத் தாக்கியதாகவும் திரு மதன் சர்மா, 62, விவரித்தார்.
வாழ்க்கை முழுவதும் நாட்டிற்காக உழைத்த தமக்குக் கிடைத்த பரிசு இது என்றும் அவர் வேதனையுடன் சொன்னார்.
இந்தச் சம்பவத்தில் அவருக்குக் கண்ணில் காயமேற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதன் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

