தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் தொடங்கியது

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் தொடங்கியது

1 mins read
ab4b54d8-cf54-4653-b599-63bbf72f5a99
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. படம்: ஊடகம் -
Google News Preferred Icon

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு, விளக்கமுடியா பக்க விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோவிஷீல்டு பரிசோதனை பாதுகாப்பானது தான் எனவும், மீண்டும் சோதனைகளை தொடரலாம் எனவும் இங்கிலாந்தின் மருந்தக ஒழுங்குமுறை மேலாணையம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்