கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக போராட்டம்

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் தங்­கம் கடத்­தல் விவ­கா­ரம் தொடர்­பாக அம்­மா­நில உயர்­கல்வி அமைச்­சர் கே.டி.ஜலீ­லி­டம் அம­லாக்­கப் பிரிவு அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். அர­சின் விதி­களை மீறி துபா­யில் இருந்து தூத­ரக பார்­சல்­கள் மூல­மாக மத சார்­புள்ள நூல்­களை அனுப்­பி­யது தொடர்­பாக அவ­ரி­டம் கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன.

இத­னைத் தொடர்ந்து அம­லாக்­கப் பிரிவு அதி­கா­ரி­க­ளின் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டதால் அமைச்­சர் ஜலீல் பதவி வில­க வேண்டும் என கோரி நேற்று முன்­தி­னம் கேரளா முழு­வ­தும் எதிர்க்­கட்­சி­கள் பல இடங்­களில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இப்­போ­ராட்­டம் கேரள அர­சுக்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. காங்­கி­ரஸ் கட்­சி­யும் பாஜ­க­வும் தனித்

­த­னி­யா­கப் போராட்­டம் நடத்­தின. எதி­ரும் புதி­ரு­மான இவ்­விரு கட்­சி­களும் கேரள அரசை எதிர்ப்­ப­தில் ஒரே நிலை­யைக் கடைப்­பி­டிக்­கின்­றன.

தங்­கம் கடத்­தல் விவ­கா­ரத்­தில் அமைச்­சர் ஜலீலை காப்­பாற்ற முதல்­வர் பின­ராயி விஜ­யன் முயல்­வ­தாக இந்த இரு கட்­சி­களும் குற்­றம் சாட்டி வரு­கின்­றன.

ஏரா­ள­மான அர­சி­யல் கட்­சித் தொண்­டர்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் பல இடங்­களில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon