இந்தியா: ஒரே நாளில் 92,071 பேர் பாதிப்பு, 77,513 பேர் குணமடைந்தனர்

1 mins read
172ec565-ba5c-4f4a-9369-f2ec8f73aac9
-

இந்தியாவில் புதிதாக 92,071 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் அந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 4.85 மில்லியனைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

உலகின் இரண்டாவது ஆக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கிருமித்தொற்று விகிதம், அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே ஆக அதிகமாக உள்ளது.

இதுவரை குறைவாக இருந்த மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,100க்கும் அதிகமானோர் உயிர் இழந்திருப்பதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 நோயால் அந்நாட்டில் இறந்தோரின் எண்ணிக்கை தற்போது 79, 722 ஆக உள்ளது. இருந்தபோதும் கடந்த 24 மணி நேரத்தில் 77,513 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 37.8 லட்சத்தை தாண்டி உள்ளது.