இந்தியா: 17 எம்.பிக்களுக்கு கொவிட்-19

இந்தியா: 17 எம்.பிக்களுக்கு கொவிட்-19

1 mins read
eeabbf2c-0ac7-4958-a7b4-943f21f01bc3
-

இந்தியாவின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில் இன்று காலை தொடங்கியது. இதில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டங்கள் இன்று முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்றை கூட்டத்தில் இந்திய அரசாங்கம் இதுவரை 23 புதிய மசோதாக்களைப் பட்டியலிட்டுள்ளது. முதலாம் நாளன்று இரண்டு மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றுள்ளது.