அதிபர், பிரதமர், நீதிபதிகளை உளவு பார்த்த சீன நிறுவனம்

அதி­பர் ராம்­நாத் கோவிந்த், பிர­த­மர் மோடி, உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி உள்­பட இந்­தி­யா­வைச் சேர்ந்த 10 ஆயி­ரம் முக்­கி­யப் பிர­மு­கர்­களை சீன நிறு­வ­னம் ஒன்று உளவு பார்த்­தி­ருப்­ப­தாக அதிர்ச்­சித் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சீனா­வைச் சேர்ந்த ‘ஜென்­ ஹுவா டேட்டா இன்­ஃபர்­மே­ஷன் டெக்­னா­லஜி’ என்ற அந்த நிறு­வ­னம் சீன அரசு மற்­றும் அந்­நாட்டு ராணு­வத்­துக்கு ஆத­ர­வா­கச் செயல்­படும் நிறு­வ­னம் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­திய உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி உட்­பட 30 நீதி­ப­தி­களை அந்­நி­று­வ­னம் தனது உளவு வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­துள்­ளது.

இந்­தியா மட்­டு­மல்­லா­மல் ஆஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, மலே­சியா, இந்­தோ­னீ­சியா உள்­ளிட்ட மேலும் பல நாடு­க­ளைச் சேர்ந்த அர­சி­யல் தலை­வர்­கள், பிர­மு­கர்­கள், மூத்த அரசு அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மா­னோரை ஜென் ஹுவா நிறு­வ­னம் உளவு பார்த்­தி­ருப்­பதை அடுத்து சம்­பந்­தப்­பட்ட நாடு­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ளன.

இந்த உளவு மோச­டி­களை அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த கிறிஸ்­டோ­பர் பால்­டிங் என்ற பேரா­சி­ரி­யர் அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளார். இவர் சீனா­வி­லுள்ள ஒரு பல்­க­லைக்­கழ­கத்­தில் சுமார் 9 ஆண்­டு­கள் வணி­க­வி­யல் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். தற்­போது வியட்­நா­மில் பணி­யாற்­று­கி­றார்.

இந்­தி­யா­வைச் சேர்ந்த ‘நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’, ‘ஆஸ்­தி­ரே­லி­யன் ஃபினான்­சி­யல் ரிவ்யூ’, ‘டெய்லி டெலி­கி­ராப்’ உள்­ளிட்ட ஊட­கங்­கள் வாயி­லாக சீன நிறு­வ­னத்­தின் உளவு ரக­சி­யங்­களை அவர் வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

இந்­திய உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யான எஸ்.ஏ.போக்டே, நீதி­பதி கான்­வில்­கார், ராஜஸ்­தான் உயர் நீதி­மன்ற நீதி­பதி சந்­தீப் மேத்தா, அல­கா­பாத் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி சுனிதா அகர்­வால், தற்­போது பல்­வேறு அமைப்­பு­களில் முக்­கி­யப் பொறுப்பு வகிக்­கும் ஓய்­வு­பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் ஆகி­யோ­ரை­யும் சீன நிறு­வ­னம் உளவு பார்த்­துள்­ளது.

ஜென் ஹுவா நிறு­வ­னம் இரு­ப­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் தக­வல் திரட்­டும் மையங்­களை நிறு­வி­யுள்­ள­தா­க­வும் இவற்­றின் மூலம் தினம்­தோ­றும் சுமார் 150 மில்­லி­யன் தர­வு­கள் திரட்­டப்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சுமார் 2.5 லட்­சம் பேரை அந்­நி­று­வ­னம் உளவு பார்த்­துள்­ள­தாக பேரா­சி­ரி­யர் கிறிஸ்­டோ­பர் கூறி­யதை மேற்­கோள் காட்டி ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அமெ­ரிக்­கா­வில் 52 ஆயி­ரம் பேர், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 35 ஆயி­ரம், இந்­தி­யா­வில் 10 ஆயி­ரம், கன­டா­வில் 5 ஆயி­ரம், மலே­சி­யா­வில் 1400 பேரை உளவு பார்த்­துள்ள சீன நிறு­வ­னம், இந்­தி­யா­வில் காலஞ்­சென்ற முன்­னாள் அதி­பர்­கள் பிர­ணாப் முகர்ஜி, அப்­துல் கலாம் மற்­றும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளை­யும் கண்­கா­ணித்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

மேலும் ராஜீவ் காந்தி, நரசிம்ம­ராவ், வாஜ்­பாய், தேவ­க­வுடா, மன்­மோ­கன் சிங் ஆகிய 5 முன்­னாள் பிர­த­மர்­கள், காங்­கி­ரஸ் தலைவி சோனியா காந்தி ராகுல் காந்தி, பிரி­யங்கா காந்தி ஆகி­யோ­ரை­யும் விட்டு வைக்­க­வில்லை. நடப்பு மத்­திய அமைச்­சர்­கள் மற்­றும் 350 நடப்பு எம்­பிக்­கள் குறித்த தக­வல்­க­ளை­யும் சீன நிறு­வ­னம் திரட்டி உள்­ளது.

மத்­தியப் பிர­தே­சம், பஞ்­சாப், மகா­ராஷ்­டிரா, ஒடிசா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளின் நடப்பு மற்­றும் முன்­னாள் முதல்­வர்­களை உளவு வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­துள்ள ஜென் ஹுவா, மறைந்த முதல்­வர் கரு­ணா­நி­தி­யை­யும் கண்­கா­ணித்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­திய முப்­ப­டை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத், ராணு­வத் தள­ப­தி­கள் உட்­பட 60க்கும் மேற்­பட்ட பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­கள், நாட்­டின் முன்­னணி செய்­தி­யா­ளர்­க­ளை­யும் ஜென் ஹுவா கண்­கா­ணித்­தது என்­றும் கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர், தொழி­ல­தி­பர்­கள் ரத்­தன் டாட்டா, கௌதம் அதானி, முன்­னணி திரை­யு­ல­கக் கலை­ஞர்­கள் ஆகி­யோரை உளவு பார்த்­த­தா­க­வும் பேரா­சி­ரி­யர் கிறிஸ்­டோ­பர் தெரி­வித்­துள்­ளார்.

உளவு வளையம்: இந்தியாவில் 10 ஆயிரம் பேர்; உலகம் முழுவதும் 2.5 லட்சம் பேர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!