ஸ்பெயின், ரஷ்யாவை முந்திய மராட்டியம்

கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் நிலைமை மேலும் மோச­ம­டைந்து வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 1 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. இந்­நி­லை­யில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யில் ரஷ்­யா­வை­யும் மரண எண்­ணிக்­கை­யில் ஸ்பெ­யி­னை­யும் அம்­மா­நி­லம் பின்­னுக்­குத் தள்ளி உள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் இது­வரை 1.07 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை சுமார் 29,894 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது ஸ்பெ­யி­னில் உயி­ரி­ழந்­த­வர்­களை விட அதி­க­மா­கும்.

அதே­போல் ரஷ்­யா­வில் 1.06 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இரு நாடு­களில் ஏற்­பட்ட பாதிப்­பை­விட இந்­தி­யா­வின் ஒரு மாநி­லம் மட்டும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது மக்­கள் மத்­தி­யில் கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே கொரோ­னா­வால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட இந்­திய நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் பெங்­க­ளூரு மூன்­றாம் இடம் பிடித்­துள்­ளது. பெங்­க­ளூ­ரு­வில் இது­வரை 1.70 லட்­சம் பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நாட்­டி­லேயே மராட்­டிய மாநி­லம் பூனே­தான் அதி­கம் பாதிக்­கப்­பட்ட நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் உள்­ளது.

அங்கு இது­வரை 2.32 லட்­சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இரண்­டா­மி­டத்­தில் உள்ள டெல்­லி­யில் 2.18 லட்­சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இப்­பட்­டி­ய­லில் சென்னை 4ஆம் இடத்­தில் உள்­ளது.

எனி­னும் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை புனே, டெல்லி, சென்­னை­யை­விட பெங்­க­ளூ­ரு­வில் குறை­வாக உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon