போக்குவரத்து நெருக்கடியால் தத்தளிக்கும் மும்பை

1 mins read
13aa9580-1d03-41d3-80cf-4d961d2e0029
படம்: இபிஏ -

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்த போதிலும் மும்பை மாநகரில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

எனவே சில தளர்வுகளை நீக்க வேண்டும் என்றும் அப்போது தான் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்றும் சமூக ஆர்வலர்கள் மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி உள்ளனர்.