மத்திய அரசு: ஏர் இந்தியாவை விற்பதுதான் ஒரே வழி

புதுடெல்லி: ஏர் இந்தியாவுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவை விற்பது அல்லது மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மக்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

“ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்குவது அல்லது மூடுவது ஆகிய இரு வாய்ப்புகள்தான் உள்ளன. யாரேனும் அந்நிறுவனத்தை வாங்கி லாபகரமாக இயக்குவார்கள் என நம்புகிறேன்.

“ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அந்நிறு வனத்துக்கு இருக்கும் கடன் தொகையை ஏற்கவேண்டியதில்லை என்று முன்பு அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது,” என்று ஹர்தீப்சிங் பூரி மேலும் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon